கோவில்பட்டியில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் தங்க நகை திருட்டு.

கோவில்பட்டியில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் தங்க நகை திருட்டு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுபா நகர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அப்பாசாமி மகன் சதீஷ்குமார்(43). மதுரை அருகே உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் மற்றும் இவரது குடும்பத்தினர், ராஜபாளையத்தைச் சேர்ந்த உறவினர்கள் ஆகியோர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வீட்டை பூட்டிவிட்டு, திருநெல்வேலிக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்ட அவர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ மற்றும் அலமாரியில் இருந்த சதீஷ்குமாருக்குச் சொந்தமான 50 பவுன் தங்க நகை மற்றும் ராஜபாளையத்தைச் சேர்ந்த அவரது உறவினரான பாபுசந்திரபிரகாஷ் மனைவி பிரியரூபாவதிக்குச் சொந்தமான 50 பவுன் தங்க நகை என மொத்தம் 100 பவுன் தங்க நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சதீஷ்குமார் அளித்த தகவலின் பேரில், டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமையில் மேற்கு காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்