ஆள் மாறி பச்சை குத்தும் தொழிலாளியை தாக்கிய சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

ஆள் மாறி பச்சை குத்தும் தொழிலாளியை தாக்கிய சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது.

திண்டுக்கல் மாவட்டம் , வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டியை சேர்ந்த அருள் இவரது மனைவி துர்காதேவி(22)யிடம்,  இளைஞர் ஒருவர் அவசரமாக தாயிடம் பேச வேண்டும் என்று செல்போனை கேட்டு வாங்கி பேசி உள்ளார்.  அவர் சென்ற சிறிது நேரத்தில் துர்காதேவி செல்போனுக்கு அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசியவர் அசிங்கமாகவும் ஆபாசமாகவும் பேசி உள்ளார்.  உடனே அருள் பேசிய எண்ணுக்கு பேசியபோது , தில் இருந்தால் ஆத்துமேடு பாலத்திற்கு வா , அங்கு நான் பச்சை குத்திக்கொண்டுருக்கிறேன் என்று கூறி உள்ளார். அருள் உட்பட 4 பேர் அங்கு சென்று பச்சை குத்திக்கொண்டு இருந்த சிவக்குமாரை முறையாக விசாரிக்காமலே தாக்கினர். இதுகுறித்த வீடியோ வைரல் ஆனது.

இது குறித்து வேடசந்துார் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது பிரச்னைக்கு சம்பந்தம் இல்லாத நபரை தாக்கியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அருள், அவரது நண்பர் நாகேந்திரன் மற்றும், 17 வயது சிறுவர்கள் 2 பேர் என நான்கு பேரை கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்