ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய 52 போலீசார் டிஸ்மிஸ்!
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய 52 போலீசார் டிஸ்மிஸ்!
பஞ்சாபில் ஊழலற்ற நிர்வாகத்தை தரும் பொருட்டு, துணை கமிஷனர்கள், மூத்த போலீஸ் அதிகாரிகள் என பல்வேறு துறைகளில் உள்ள உயரதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டு இருந்தது. அதை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய 52 போலீஸ் அதிகாரிகளை பணியில் இருந்து மாநில நிர்வாகம் டிஸ்மிஸ் செய்துள்ளது. இதை அம்மாநில டி.ஜி.பி., கவுரவ் யாதவ் நிருபர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது; பணிநீக்கம் செய்யப்பட்ட அனைவரும் கான்ஸ்டபிள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையான பொறுப்புகளில் இருந்தவர்கள். கடந்த 10 நாட்களில் மாவட்ட போலீஸ் உதவி எஸ்.பி., அளித்த பரிந்துரைகளின் படி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ஊழலற்ற நிர்வாகத்தை தரவேண்டும் என்று முதல்வர் பகவந்த் மன் பிறப்பித்த உத்தரவை பின்பற்றி டிஸ்மிஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.