சிவகங்கை வனக்காடுகளை அலங்கரிக்கும் 60 டன் ஆகாஷ பாறை,
சிவகங்கை வனக்காடுகளை அலங்கரிக்கும் 60 டன் ஆகாஷ பாறை,
சிவகங்கை மாவட்ட வனப்பகுதிகளில் புள்ளி மான்கள், காட்டெருமைகள், பல நுாறு ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆகாஷ பாறைகள் அழகுற காட்சியளிக்கின்றன. இம்மாவட்டம் 4189 சதுர கிலோ மீட்டரில் உள்ளது.
இதில் 13 சதவீதம் காடுகளாகும். வனத்துறை கீழ் மதகுபட்டி மண்மலை மேடு, எஸ்.புதுார் மலைகள், திருமலை, ஏரியூர், திருப்புத்துார் பகுதி வனக்காடுகள் உள்ளன. அதிகபட்சமாக பல ஆயிரம் புள்ளி மான்கள் உள்ளன. மான்களை தாக்குமளவிற்கு இப்பகுதியில் புலி இல்லாததால் மான்களின் வளர்ச்சி மாவட்டத்தில் அதிகம் உள்ளது.
அடுத்தபடியாக மர அணில், நரி, காட்டெருமைகள் வசிக்கின்றன. காடுகளில் கிடைக்கும் செடி, கொடிகளை உண்டு உயிர்வாழும் இவ்விலங்குகள் இனப்பெருக்கம் செய்வதால் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காடுகளில் திரியும் புள்ளி மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட விலங்குகள் மாலையில் தண்ணீர் குடிக்க நீர்நிலைகள், வனத்துறை அமைத்துள்ள குடிநீர் தொட்டிகளில் கூடுகின்றன. இவை காண கண்கொள்ளா காட்சியாக உள்ளது.
ஏரியூரில் 60 டன் ஆகாஷ பாறைகள்:
காடுகளை காட்டு விலங்குகள் மட்டுமே அலங்கரிக்கவில்லை. பல நுாறு ஆண்டுகளை கடந்து ஒரே இடத்தில் தனித்து நிற்கும் ஆகாஷ பாறைகளும் வனப்பகுதியை அலங்கரிக்கின்றன.
ஏரியூர் அருகே அம்மச்சிபட்டி வனத்துறைக்கு சொந்தமான மலை பகுதியில் பல நுாறு ஆண்டுகள் பழமையான 60 டன் எடையுள்ள ஆகாஷ பாறை, மலைக்கும், பாறைக்கும் எவ்வித தொடர்பின்றி கம்பீரமாக காட்சி அளிக்கிறது. ஜ்எவ்வளவு பெரிய இயற்கை சீற்றத்திற்கும் அசைந்து கொடுக்காமல் கம்பீரமாக இந்த பாறை நிற்கிறது. இங்குள்ள பெரிய பாறை ஒன்றின் எடை 60 டன் முதல் சிறிய பாறை எடை 30 டன் வரை இருக்கும். இங்கு மட்டுமே 400க்கும் மேற்பட்ட புள்ளி மான்கள் வசிக்கின்றன. நரிகள் வாழ்ந்த நரிக்குடவுஆகாஷ பாறை அருகே உள்ள சுனையில் இருந்து வெளியேறும் நீர் ஊற்றிற்கு வந்து மாலை நேரத்தில் குடிநீர் அருந்தி செல்கின்றன. இங்கு 500 க்கும் மேற்பட்ட நரிகள் வாழ்ந்துள்ளன. தற்போது நரிகள் இல்லாதபோதும், அவை வசித்த குகைகளை நரிக்குடவு’ என்ற பெயரில் வனத்துறை பாதுகாக்கிறது.