அல்லூரார் அசத்திய அன்னதான விழா. லட்சக்கணக்கானோர் பயன் அடைந்தனர்.
அல்லூரார் அசத்திய அன்னதான விழா. லட்சக்கணக்கானோர் பயன் அடைந்தனர்.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, நேற்றும், இன்றும் முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கணக்கன்பட்டியில் திருச்சியை சேர்ந்த பசும்பொன் மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் அல்லூர் சீனிவாசன் தலைமையில் பழனி பாதயாத்திரை செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு நேற்றும், இன்றும் சாம்பார் சாதம், கேசரி, சப்பாத்தி குருமா, இட்லி, மஸ்ரூம் பிரியாணி, தண்ணீர் என்று அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அன்னதான விழாவில் திருச்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், பத்திரிக்கையாளர்களும், பக்தர்களும் கலந்து கொண்டு அன்னதான விழாவினை சிறப்பித்தனர்.