பள்ளி உணவில் பல்லி. 13 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி.

பள்ளி உணவில் பல்லி. 13 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த கங்காபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வீட்டிற்கு வாங்கி சென்ற உணவில் பல்லி இருந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆரணி அரசு மருத்துவமனையில் 13 குழந்தைகளை அனுமதிக்கப்பட்டிருந்தனர். தகவல் அறிந்து திருவண்ணாமலை திமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர்  தரணிவேந்தன் நேரில் சென்று நலம் விசாரித்து மருத்துவமனிடம் ஆலோசனைகள் கேட்டறிந்தார் எந்தவித பாதிப்பும் இல்லை என மருத்துவர் தெரிவித்தார். குழந்தைகளுக்கு பழம் பிரட் வழங்கி பெற்றோர்களிடம் குழந்தைகள் நல்ல முறையில் உள்ளனர் பயப்பட வேண்டாம் என ஆறுதல் கூறினார். கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்