பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட முன்னாள் பெண் பத்திரிக்கையாளர் குடும்பத்துக்கு வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த பந்தல் ராஜா நிதி உதவி.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்தவர் செல்வி. இவர் முன்னாள் பத்திரிக்கை நிருபர். பல பத்திரிக்கைகளில் வேலை பார்த்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் 4 வருடங்களுக்கு முன் பக்க வாதம் வந்து நடக்க முடியாமல் அவதிப்பட்டு வீட்டிலேயே இருந்துள்ளார் செல்வி. அவரால் வேறு எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை .
இந்த நிலையில் தன் மகளை படிக்க வைக்க(பீஸ் கட்ட) மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். அப்போதுதான் வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பந்தல் ராஜா அவர்களை பற்றி தனக்கு தெரிந்த பத்திரிகை நண்பர் ஒருவர் மூலமாக தெரியவர உடனடியாக பந்தல் ராஜா அவர்களை தொடர்பு கொண்டு உதவி கேட்டிருக்கிறார். அவரும் கண்டிப்பாக உதவி செய்வதாக சொன்னவர் சொன்னதை போலவே நேற்று மாலை நிர்வாகிகளுடன் நேரில் சென்று செல்வி மகளின் கல்விக்கு பண உதவி செய்துள்ளார். மேலும் படிப்புக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்வதாகவும் உறுதி அளித்து உள்ளார். அதேபோல் வசதி இல்லாமல் படிக்க இயலாமல் இருக்கும் மாணவர்களுக்கு தன்னாலான உதவிகள் கண்டிப்பாக இருக்கும் என்று உறுதி அளித்திருக்கிறார். பந்தல் ராஜா அவர்களின் இந்த செயலை செல்வியின் குடும்பம் மட்டும் அல்ல பலரும் பாராட்டி வருகிறார்கள்.