*நவம்பர் 26, 2023 மூன்றாம் சுற்று மழை துவங்கியது, தமிழகத்தில் பரவலாக மழை வாய்ப்பு.

*நவம்பர் 26, 2023 மூன்றாம் சுற்று மழை துவங்கியது, தமிழகத்தில் பரவலாக மழை வாய்ப்பு.*

 

*வானிலை_அமைப்பு:*

==> ஈரப்பதமிகுந்த கீழைக்காற்று தமிழகம் வருகை தந்து நேற்று துவங்கிய மூன்றாம் சுற்று மழை அடுத்த 4 நாட்களுக்கு (நவம் 29ம்) தேதி வரை பரவலாக நீடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

=======================================

==> மூன்றாம் சுற்று பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுதும் விரிவடைய கூடும்.

*இன்று (26.11.2023) வரும் 24 மணி நேரத்தில் நாளை (27.11.2023) காலை 8:30 மணிக்குள்*

=> தமிழகத்தில் அவ்வபோது பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பெரும்பாலும் தெளிவான வானத்துடன் வெப்பமான சூழல் நிலவும். மழைக்கு முன்பும், பின்பும் வெயில் இருக்கும்.

=> கடலோர தமிழக மாவட்டங்களான *#சென்னை #திருவள்ளுர்  #காஞ்சிபுரம் #செங்கல்பட்டு #விழுப்புரம் #புதுச்சேரி #கடலூர் #மயிலாடுதுறை #காரைக்கால் #நாகப்பட்டினம் #திருவாரூர் #தஞ்சாவூர் #புதுக்கோட்டை #இராமநாதபுரம் #தூத்துக்குடி #திருநெல்வேலி #கன்னியாகுமரி* உள்ளிட்ட மாவட்டங்களில்  மாவட்டத்தின் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமானது முதல் சற்றே கனமழை பதிவாகும், ஒருசில இடங்களில் கனமழை பதிவாகும்.

==> மத்திய கடலோர மாவட்டங்களான #கடலூர்  #மயிலாடுதுறை #காரைக்கால்  #நாகப்பட்டிணம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மிககனமழை பதிவாகலாம்.

பகல் பொழுதில் வெயிலும், இரவு/அதிகாலையில் கடலோரத்தில் மழை எதிர்ப்பார்க்கலாம்.

=> தமிழகத்தின் உள்மாவட்டங்களான *#இராணிப்பேட்டை #வேலூர் #திருவண்ணாமலை #திருப்பத்தூர் #கிருஷ்ணகிரி #தர்மபுரி #சேலம் #கள்ளக்குறிச்சி #பெரம்பலூர் #அரியலூர் #திருச்சி #திண்டுக்கல்  #மதுரை #சிவகங்கை #விருதுநகர்*  போன்ற மாவட்டங்களில் பிற்பகல்/மாலை மாவட்டத்தின் ஒருசில இடங்களில் மிதமானது முதல் சற்றே கனமழையும், ஒரிரு இடங்களில் கனமழையும் பதிவாகும்.

=> கொங்கு மற்றும் மேற்கு மாவட்டங்களான *#ஈரோடு #நாமக்கல் #திருப்பூர் #கரூர் #கோயம்புத்தூர் #நீலகிரி  #தேனி #தென்காசி* போன்ற மாவட்டங்களில் பகலில் நல்ல வெயிலும் இரவு, நள்ளிரவு நேரங்களில் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும் எதிர்ப்பார்க்கலாம்.

==> நவம் 29ம் தேதி இரவு வரை இந்த மூன்றாம் சுற்று பருவமழை தொடரும்.

=======================================

என்று  டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்