ஆற்று வெள்ளத்தில் பலியான தொழிலாளியின் மகள் படிப்பிற்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவி ஊர்வசி அமிர்தராஜ எம்.எல.ஏ வழங்கினார்.
ஆற்று வெள்ளத்தில் பலியான தொழிலாளியின் மகள் படிப்பிற்கு
ரூ.25 ஆயிரம் நிதியுதவி
ஊர்வசி அமிர்தராஜ எம்.எல.ஏ வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள செந்நெலமாநகரில் தாமிபரணி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த கூலி தொழிலானியின் மகள் கல்லூரி படிப்பிறகு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.
ஏரல் அருகே உள்ள செந்நெல்மாநகரை சேர்ந்த கூலி தொழிலாளி ராமச்சந்திரன். இவர் கடந்த 3 வருடத்திற்கு முன் தாமிரபரணி ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். அப்பொழுது ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊாவசி அமிர்தராஜ செந்நெல் மாநகருக்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து அரசு வழங்கிய உதவி தொகையை வழங்கி ஆறுதல் கூறினார்.
மேலும் தந்தையை இழந்த மாணவி மோனிஷாவின் கல்வி செலவை தானே ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்தார். இதை அடுத்து அவர் திருச்செந்தூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் சேர்ந்து படித்து வரும் மாணவி மோனிஷாவிற்கு கடந்த 2 வருடமாக தொடர்ந்து தனது சொந்த நிதியில் இருத்து நிதியுதவி அளித்து வந்தார். தற்போது மூன்றாம் ஆண்டு கல்லூரியில் படிப்பதற்கு ரூ.25 ஆயிரக்கணக்கான காசோலையை ஊர்வசி அமிர்தராஜ் எம் எல் ஏ மாணவியிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா சங்கர், ஸ்ரீவை யூனியன் கவுன்சிலர் பாரத, மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் எடிசன், உமரிக்காடு பஞ்சாயத்து தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.