ரூ.1.15 கோடி மோசடி செய்த அலுவலக கண்காணிப்பாளர் மீது வழக்குப்பதிவு. இது தேனி குடிநீர் வடிகால் வாரிய விவகாரம்.
ரூ.1.15 கோடி மோசடி செய்த அலுவலக கண்காணிப்பாளர் மீது வழக்குப்பதிவு. இது தேனி குடிநீர் வடிகால் வாரிய விவகாரம்.
தேனியில் தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரிய கழிவுநீர் அகற்றும் கோட்ட அலுவலகத்தில் நிர்வாக பொறியாளராக கருத்தபாண்டியன், கண்காணிப்பாளராக முருகானந்தம் பணிபுரிந்து வருகின்றனர். அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கழிவுநீர் அகற்றும் கோட்ட தலைமை அலுவலக விழிப்பு பணி அலுவலர் வரதராஜன் தலைமையிலான அதிகாரிகள் குழு
ஆய்வு நடத்தினர். ஆய்வின்போது, கடந்த 2022, அக். 1ம் தேதி முருகானந்தம், காசோலை மூலம் சென்னையை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.42.29 லட்சத்தை அனுப்பியுள்ளார். மேலும், அலுவலக வங்கிக்கணக்கில் இருந்து தனது பெயரில் உள்ள வங்கி கணக்கிற்கு பல்வேறு தேதிகளில் பரிமாற்றம் செய்த ரூ.75.77 லட்சத்தை சேர்த்து மொத்தம் ரூ.1.15 கோடி மோசடி செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து, தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், கண்காணிப்பாளர் முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்