தமிழகம் முழுவதும் பருப்பு மில்கள் 29 ம் தேதிவேலை நிறுத்த போராட்டம்.
தமிழகம் முழுவதும் பருப்பு மில்கள் 29 ம் தேதிவேலை நிறுத்த போராட்டம்.
திருச்சிமாவட்ட பருப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மத்திய அரசின் ஜி.எஸ். டி.கவுன்சில் நாடு முழுவதும் உள்ள வணிக நிறுவன கட்டடங்களின் மீது 18% ஜி.எஸ். டி. வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் வருகிற வருகிற 29-ந்தேதி (வெள்ளிக் கிழமை )தமிழகம் முழுவதும் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள பருப்பு மில்கள் அனைத்தும் ஒருநாள் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளனர்.
நம் கண்டனத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஏதுவாக நாம் அனைவரும் வரும் வெள்ளி கிழமை மில்களை முழுவதும் அடைத்து முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.