விராலூர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா முழக்கம்: அமைச்சர் சிவ.மெய்யநாதன் பங்கேற்பு

விராலூர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா முழக்கம்: அமைச்சர் சிவ.மெய்யநாதன் பங்கேற்பு.

விராலிமலை அடுத்துள்ள விராலூர் சீனிவாச பெருமாள் கோவிலில் கும்பாபிசேக விழா நேற்று நடைபெற்றது விழாவில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துரை அமைச்சர் சிவ.மெய்யநாதன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றனர் விழாவையொட்டி மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.

விராலிமலை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விராலூரில் வரலாற்று புகழ் பெற்ற புராதன சின்னமான ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது இக்கோயிலில் உள்ள சீனிவாச பெருமாள் தேவியருடன் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இந்த நிலையில், இக்கோவிலில் கடந்த 2002ம் ஆண்டு கும்பாபிசேகம் நடத்தப்பட்டது குடமுழுக்கு நடத்தப்பட்ட 22 ஆண்டுகள் ஆன நிலையில் குப்பாபிஷேகம் நடத்த ஊர் முக்கியஸ்தர்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 2023 வருடம் பிப்ரவரி மாதம் பாலாலயம் செய்து திருப்பணிகள் தொடங்கி கடந்த சில தினங்களுக்கு முன்னர் முடிவுற்ற நிலையில் நேற்று(டிசம்பர் -5)ம் கும்பாபிஷேகம் நடைபெற்றது

முன்னதாக, கடந்த 3ம் தேதி சங்கல்பம் ரித்விக், வர்ணம், விஸ்வக்ஸேன ஆராதனம், புண்யாஹ வாசனம்,ம்ருத்சங்க்ரஹணம், அங்குரார்ப்பணம்,யாகசாலை பிரவேசம், பாலிகா ஸ்தாபனம்,வேத திவ்ய ப்ரபந்தாதி தொடக்கம், வாஸ்து பூஜை பூர்ணாகுதி பலி முதல் காலம் நடைபெற்றது.

தொடர்ந்து 4-ம் தேதி காலை கலாகர்ஷனம், ரக்ஷாபந்தனம், மஹாகும்பஸ்தாபனம், மாநோந்மானசாந்தி,ஹோமம், கும்ப மண்டல பிம்ப ஆராதனம், பரி அக்னி கரணம், தத்வ ஸம்ஹாரம்,ஸ்ருஷ்டி நியாசங்கள், வேத ப்ரயந்த பாராயணம், பூர்ணாகுதி பலி சாற்றுமுறை இரண்டாம் காலம் 3 மணி முதல் 6 மணி வரை 49 கலசம், 09 கலசம் விமான அபிஷேகம், 6 மணி முதல் 8 மணி வரை சதுர்ஸ்தானார்சனம், வேதாரம்பம், தத்வ ஹோமங்கள், பூர்ணாகுதி பலி, சாற்று முறை, நிவேதனம் மூன்றாம் காலம் பூஜையும் இரவு 10 மணிக்கு சயநாதி வாஸம் நடைபெற்றது.

தொடர்ந்து 5-ம் தேதி காலை 6 மணிக்கு கோ பூஜை, விஸ்வரூபம் 7 மணிக்கு சதுர்ஸ்தானார்சனம் ஹோமம், பூர்ணாகுதி, தசதானங்கள், புனித தீர்த்த குடங்கள் புறப்பாடு நடைபெற்றது விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் காலை 8 மணியில் இருந்து 9 மணிக்குள் நடைபெற்றது இதில் சிவாச்சாரியர்கள் மூலவர் மற்றும் பரிவாரதேவதைகள் கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர் அப்போது கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டனர் தொடர்ந்து உபயதாரர்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில்,விவசாய தொழிலாளர் அணி மாநில துணைச் செயலாளர் சந்திரசேகரன், திமுக தலைமை கழக செய்தி தொடர்பு துணை தலைவர் அரசகுமார்,தென்னலூர் பழனியப்பன், விராலிமலை திமுக மத்திய ஒன்றிய செயலாளர் அய்யப்பன், ஊராட்சி மன்ற தலைவர் பழனியாண்டி உள்ளிட்ட கமிட்டி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர் .

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்