முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இ வி கே எஸ் இளங்கோவன் மறைவு. அமைச்சர் கே. என்.நேரு மலர் தூவி மரியாதை
முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இ வி கே எஸ் இளங்கோவன் மறைவு. அமைச்சர் கே. என்.நேரு மலர் தூவி மரியாதை.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ. மறைவை யொட்டி திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான அருணாசல மன்றத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு, அமைச்சர் கே.என்.நேரு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், சேர்மன் துரைராஜ், காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ரெக்ஸ், கோவிந்தராஜன் மற்றும் திருச்சி வேலுச்சாமி, பிரியங்கா பட்டேல் மற்றும் பலர் உள்ளனர்.