திருச்சியில் திமுக தெற்கு மாவட்டம் சார்பில் ரத்ததான முகாம். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
திருச்சியில் திமுக தெற்கு மாவட்டம் சார்பில் ரத்ததான முகாம். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதல்வருமான
உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்தநாள் விழா திருச்சி தெற்கு மாவட்டத்தில் 47 நிகழ்ச்சியாக மாபெரும் இரத்தான முகாம் தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் வரவேற்புரை ஆற்றினார். முகாமை மாவட்ட கழகச் செயலாளர், பள்ளி கல்வித்துறை அமைச்சர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை தாங்கி
இரத்ததானத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
முகாமில் கழக மருத்துவ அணி துணைத்தலைவர் கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மாவட்டக் கழக நிர்வாகிகள் சேகரன், சபியுல்லா, கோவிந்தராஜ், செங்குட்டுவன், மூக்கன், குணசேகரன், பகுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் மாவட்ட ஒன்றிய பகுதி கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட னர்.
துணை முதல்வர் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் வயதை குறிக்கும் குறிக்கும் விதமாக 47 நபர்கள் முகாமில் ரத்த தானம் செய்தனர். முடிவில் தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன் நன்றி கூறினார்.