செங்கோட்டை நகருக்குள் தொடரும் போக்குவரத்து நெருக்கடி! இயற்கை வள பாதுகாப்பு சங்கம் கோரிக்கை.
செங்கோட்டை நகருக்குள் தொடரும் போக்குவரத்து நெருக்கடி! இயற்கை வள பாதுகாப்பு சங்கம் கோரிக்கை.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் கனிமவள கனரக ராட்சத வாகனங்கள் நகர் பகுதிக்குள் அதுவும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கக்கூடிய நேரங்களிலும் அளவுக்கு அதிகமாக வந்து செல்வதால் இந்த நெரிசல் ஏற்படுகிறது. காவல்துறை தங்களால் முடிந்தவரை போக்குவரத்தை சரி செய்ய முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் கட்டுக்குள் வர மறுக்கிறது.
ஏனென்றால் இந்த கனிம வள வாகனங்களை இயக்கக்கூடிய வாகன ஓட்டுனர்கள் ஒரு சிலர் காவல்துறையின் அறிவுறுத்தல்களையே மதிக்க மறுக்கின்றனர். இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் மட்டுமே. விதிகளை மீறும் இந்த கனிமவள வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பொதுமக்கள் இந்த போக்குவரத்து நெரிசல் என்ற பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும்.
நாங்கள் அறிவித்திருந்த முற்றுகை போராட்டம் சம்பந்தமாக நடைபெற்ற அனைத்து சமாதான கூட்டங்களிலும் தென்காசி மாவட்டத்தின் உயர் பதவியில் இருக்கக்கூடிய அதிகாரிகள் பொதுமக்கள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் இந்த கனரக வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மீண்டும் மீண்டும் கோரிக்கை வைக்கிறோம். இதுபோன்ற பொதுமக்கள் அதிகம் நடமாடக்கூடிய நேரங்களில் கனிமவள கனரக வாகனங்களை நகர் பகுதிக்குள் அனுமதிக்க வேண்டாம் என்றும் மீறும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பிரச்சனைக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் இயற்கை வள பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.