திருச்சி மாவட்டமஹல்லா மஸ்ஜித் ஜமாஅத் பேரவை பொதுக்குழு கூட்டம்

திருச்சி மாவட்டமஹல்லா மஸ்ஜித் ஜமாஅத் பேரவை பொதுக்குழு கூட்டம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் முதன்மை ஆலோசகராக தேர்வு.

திருச்சி மாவட்ட மஹல்லா மஸ்ஜித் ஜமாஅத் பேரவை புதிய நிர்வாகிகள் தேர்வு பொதுக்குழு கூட்டம் தென்னுர் ஜெனரல் பஜார் பள்ளிவாசலில் நடைபெற்றது கூட்டத்தில் 2025-2028 மூன்று ஆண்டுகளுக்கு மாவட்ட தலைவராக கவிஞர் சையது ஜாபர், மாவட்ட பொதுச் செயலாளராக எம். அப்துல் வகாப், மாவட்ட பொருளாளராக எம். சிராஜுதீன் ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.

கவுரவ தலைவராக ஜி. எஸ். ஏ. மன்னான், தாலுகா வாரியாக மாவட்ட துணைத்தலைவர்கள்11 பேர்கள், மாவட்ட துணைச் செயலாளர்கள் 11 பேர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் 11பேர்கள் , மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் 11 பேர்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் முதன்மை ஆலோசகராகவும் வழக்கறிஞர் முஹம்மது ஜலாலுதீன் அக்பர் சட்ட ஆலோசகராகவும் கூட்டத்தில் நியமனம் செய்யப்பட்டனர். முடிவில் துணைச் செயலாளர் முசிறி சலீம் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்