பதவி உயர்வு பெற்ற ஆலங்குளத்தை சேர்ந்த டி.எஸ்.பி முத்தமிழ்செல்வன் அவர்களை நேரில் சந்தித்து எம்.ஜி.ஆர் கிராம கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் வாழ்த்து.
பதவி உயர்வு பெற்ற ஆலங்குளத்தை சேர்ந்த டி.எஸ்.பி முத்தமிழ்செல்வன் அவர்களை நேரில் சந்தித்து எம்.ஜி.ஆர் கிராம கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் வாழ்த்து.
தென்காசி மாவட்டம் தெற்கு மாயமான் குறிச்சியை சேர்ந்தவர் முத்தமிழ்செல்வன். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஹட்கோ காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிந்து வந்த நிலையில் தற்போது டி.எஸ்.பி. ஆக பதவி உயர்வு பெற்று தஞ்சை மாவட்டம் குற்ற ஆவண காப்பாக டி.எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சொந்த ஊருக்கு வந்திருந்த டி.எஸ்.பி முத்தமிழ்செல்வன் அவர்களை ஆலங்குளம் எம்.ஜி.ஆர் கிராம கல்வி அறக்கட்டளை தலைவர் மேஜர் ரவிக்குமார், பொருளாளர் கீதம் பொன்னுத்துரை, மாயமான் குறிச்சி ராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.