தமிழகத்தில் கொலை கொள்ளை, பாலியல் பலாத்காரங்கள் என தொடர்ந்து குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன, பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி
தமிழகத்தில் கொலை கொள்ளை, பாலியல் பலாத்காரங்கள் என தொடர்ந்து குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன, 2026 ஆம் ஆண்டு இந்த அரசாங்கம் இருக்காது, இந்த அரசாங்கம் மிகப்பெரிய தோல்வி அடையும்,மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள், திமுக கூட்டணிக் கட்சியை சேர்ந்தவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், ஒற்றைக்கருத்தில் மட்டும் ஒன்றுபட்டுள்ளனர் அது பாஜக வந்து விடக்கூடாது என்ற அந்த ஒற்றை கருத்து தான் அவர்களை ஒன்று படுத்துகிறது என*
*கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பாஜக வடக்கு பகுதி சார்பாக பாஜக கொடி கம்பம் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார்.