*கடையம் அருகே மண் லாரியை மறித்து பிரச்சனையில் ஈடுபட்ட வழக்கில் லாரி ஓட்டுனர் உட்பட 5 நபர்கள் மீது வழக்கு பதிவு*
*கடையம் அருகே மண் லாரியை மறித்து பிரச்சனையில் ஈடுபட்ட வழக்கில் லாரி ஓட்டுனர் உட்பட 5 நபர்கள் மீது வழக்கு பதிவு*
தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாலங்கட்டளை அருகே அமைந்துள்ள குவாரியில் இருந்து டிப்பர் லாரிகளில் மண் லோடு ஏற்றி கொண்டு நாலங்கட்டளை வழியாக வருவதால் கிராம சாலைகள் சேதப்படுவதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராஜ், இசக்கியப்பன், செல்வம் மற்றும் உதயகுமார் ஆகியோர் சேர்ந்து அவ்வழியாக வந்த லாரிகளை வழிமறித்து வேறு வழியாக செல்லும்படி கூறியதால் அவர்களுக்கும் லாரியின் உரிமையாளரான சாமுவேல்ராஜா என்பவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அசிங்கமாக பேசி கைகளால் தாக்கி, கால்களால் மிதித்து இரு தரப்பினரும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து இருதரப்பினரிடமும் புகார் பெற்று லாரியின் உரிமையாளரான ஆலங்குளம் பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்த சாமுவேல் ராஜா(45) மற்றும் நாலாங்கட்டளை பகுதியைச் சேர்ந்த அந்தோணிராஜ்(35), இசக்கியப்பன்(26), செல்வம்(42), உதயகுமார்(42) ஆகிய ஐந்து நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சாமுவேல் ராஜா, இசக்கியப்பன் மற்றும் உதயகுமார் ஆகியோரை கடையம் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்..