தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் சிமெண்ட் டேங்கர் லாரி அடுத்தடுத்து 6 வாகனங்கள் மீது மோதி விபத்து. 5க்கு மேற்பட்டோர் படுகாயம்.
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் சிமெண்ட் டேங்கர் லாரி அடுத்தடுத்து 6 வாகனங்கள் மீது மோதி விபத்து. 5க்கு மேற்பட்டோர் படுகாயம்.
இன்று காலை அங்கு ஏற்பட்ட விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேக் பிடிக்காமல் முன்னால் சென்ற வாகனங்கள் மீது லாரி மோதியதில் கார்கள் உட்பட ஐந்து வாகனங்கள் தொடர்ச்சியாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து தொடர்பாக தொப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் சிக்கியவர்கள் அனைவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
சேலத்தில் இருந்து பெங்களூர் செல்லும் வாகனங்கள் இந்த விபத்து காரணமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளன. இந்த விபத்தில் ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.