வாணியம்பாடியில் பட்டபகலில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ருபாய் 5 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற நபர்கள். புகாரின் பேரில் நகர போலீஸார் விசாரணை.

வாணியம்பாடியில் பட்டபகலில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ருபாய் 5 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற நபர்கள். புகாரின் பேரில் நகர போலீஸார் விசாரணை.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பாலப்பனூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் வாணியம்பாடி மலங்கு சாலையில் புதியதாக வீடு கட்டி வருகிறார்.

இந்நிலையில் வீடு கட்டும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையை ஒப்பந்ததாரரான ஜெயபால் என்பவரிடம் அளித்துள்ளார்.

அதனை பெற்றுக்கொண்ட ஜெயபால், வாணியம்பாடி சி.எல். சாலையில் உள்ள வங்கிக்கு சென்று ரூபாய் 5 லட்சத்தை எடுத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் வைத்து புறப்பட முயன்ற போது இருசக்கர வாகனம் பஞ்சராகி இருந்ததை தொடர்ந்து அவர் வாகனத்தை தள்ளி கொண்டு மெக்கானிக் கடைக்கு சென்று அங்கே இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணப்பையை எடுத்துக்கொண்டு மலங்க சாலையில் கட்டிட பணி நடக்கும் இடத்திற்கு சென்று அங்கே பணத்தை சுப்பிரமணியிடம் ஒப்படைத்துள்ளார்.

சுப்பிரமணி பணத்தை தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வைத்த பின்னர் அவர் மற்றும் ஜெயபால் ஆகிய இருவரும் வீட்டின் எதிரே உள்ள உறவினர் வீட்டிற்கு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றனர்.

நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்து பார்த்த போது இருசக்கர வாகனத்தின் வைத்திருந்த ரொக்க பணம் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனை தொடர்ந்து அருகில் இருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்த போது, சுப்பிரமணி நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் அருகில் அடையாளம் தெரியாத நபர்கள் வந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

சம்பவம் குறித்து ஜெயபால் வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நகர போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

சம்பவம் குறித்து நகர போலீஸார் வழக்குபதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவிகளில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்துச்சென்ற நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்