பரமக்குடி நகராட்சியில் நடந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் குறைகளைக் கொட்டி தீர்த்ததால் காரசார விவாதம்.

பரமக்குடி நகராட்சியில் நடந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் குறைகளைக் கொட்டி தீர்த்ததால் காரசார விவாதம்.

ராமநாதபுரம் பரமக்குடி நகராட்சியில் மாதந்திர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள் நிரந்தர துப்புரவு பணியாளர்கள் இல்லாமல் தெருக்களில் குப்பை தேங்குவதுடன், வாறுகால்கள் அள்ளப்படாமல் சுகாதாரக் கேடாக இருக்கிறது. பல்வேறு பகுதிகளில் சிமென்ட் குடிநீர் தொட்டி உடைந்துள்ள நிலையில் ஆழ்குழாய் மோட்டார்கள் பயன்பாடின்றி உள்ளது.

மக்களுக்கு போதுமான குடிநீர் வழங்க மேல்நிலை குடிநீர் தொட்டிகள் தேவை. பல தெருக்களில் இன்னும் ரோடு வசதி செய்யப்படவில்லை. நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தல், தெருக்களில் கால்நடைகள் சுற்றித் திரிவதை கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை. சுகாதார வளாகங்கள் இருந்தும் பயன்பாட்டில் இல்லை. வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பது தொடர்கிறது, என பேசினார்கள்.

தலைவர் சேதுகருணாநிதி பேசுகையில், நாய்களுக்கு கு.க., செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வரும் நாட்களில் ஆழ்குழாய்கள் மற்றும் சுகாதார வளாகங்கள் சீரமைக்கப்படும். வைகை ஆற்றில் கழிவு நீர் கலக்காமல் இரண்டு ஓரங்களிலும் பெரியளவில் குழாய்கள்அமைக்கும் திட்டம் உள்ளது என்றார்.

துணைத் தலைவர் குணா, கமிஷனர் முத்துசாமி முன்னிலை வகிக்க, மேலாளர் தங்கராஜ் வரவேற்று மன்ற பொருட்களை வாசித்தார். 74 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சுகாதார அலுவலர் ஜெயராமன், இன்ஜினியர் சுரேஷ்பாபு, குடிநீர் பிரிவு பேச்சியம்மாள், வருவாய் ஆய்வாளர் நாகநாதன், சத்துண உதவியாளர் ராஜேஸ்வரி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்