திருச்சியில் ஏ. ஐ டி யு சி , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
திருச்சியில் ஏ. ஐ டி யு சி , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
போராடும் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதை கண்டித்தும், அதானி குழும ஊழல் கேடுகளை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த கோரியும் ,பெருகிவரும்வேலையில்லா திண்டாட்டம் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்திதிருச்சி மாவட்ட ஏஐடியுசி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மாநகர் புறநகர்குழுக்களின் சார்பில் ஜங்ஷன் காதி கிராப்ட் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர்கள் சிவா, ராஜ்குமார் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்து திருச்சி மாவட்ட ஏஐடியுசி பொதுச் செயலாளர் க.சுரேஷ் உரையாற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் செல்வராஜ், கிளர்ச்சி பிரச்சார குழு மணவை இந்திரஜித், ஏஐடியுசி மாவட்ட தலைவர் நடராஜா ,துணைத் தலைவர் கணேசன், செல்வகுமார், செயலாளர் சுப்பிரமணி உள்ளிட்டவர் உரையாற்றினர்.