வனத்துறையினருக்கே தண்ணி காட்டும் ஒற்றை கரடி.
வனத்துறையினருக்கே தண்ணி காட்டும் ஒற்றை கரடி.
நெல்லை மாவட்டம் அம்பை அடுத்து கல்லிடைக்குறிச்சி நெசவாளர் காலனி பகுதியிலுள்ள கோவில் வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒற்றை கரடி சுற்றித்திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஒற்றை கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் விட்டனர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் அதே பகுதியில் கரடி ஒன்று வனத்துறையினருக்கே தண்ணி காட்டி சுற்றித்திரிந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் கோவில் வளாகத்தில் கரடி சுற்றித்திரிந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.