தொட்டியம் காவிரி ஆற்றில் நிரந்தர கொரம்பு அமைக்கப்படும். திமுக வேட்பாளர் அருண் நேரு விவசாயிகள் மத்தியில் உறுதி.
தொட்டியம் காவிரி ஆற்றில் நிரந்தர கொரம்பு அமைக்கப்படும். திமுக வேட்பாளர் அருண் நேரு விவசாயிகள் மத்தியில் உறுதி.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளராக அருண்நேரு போட்டியிடுகிறார். இவர் முசிறி தொகுதிக்குட்பட்ட தொட்டியம் தாலுகாவில் பிரசார பயணத்தை தொடங்கினார். தொட்டியம் அருகே உள்ள திருஈங்கோய்மலை கிராமத்தில் துவங்கிய பிரசார பயணத்திற்கு நகராட்சி வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார்.
முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் முன்னிலை வகித்தார்.
பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது, தமிழக மக்களின் வளர்ச்சிக்காக முதல்வர் ஸ்டாலின் அயராது பாடுப்பட்டு வருகிறார். பெண்களுக்கான உரிமைத் தொகை, பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம், கல்லூரி செல்லும் மாணவ, மாணவியருக்கு உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகைகள் என பல்வேறு திட்டங்களை மக்கள் நலனுக்காக செயல்படுத்துகிறார்.
இப்பகுதி விவசாயிகள் காவிரி ஆற்றின் பலனை முழுமையாக பெரும் வகையில் நிரந்தர கொரம்பு அமைத்து தரப்படும். விவசாயிகளின் தோழனாக விளங்கும் தமிழக அரசு நீர் ஆதாரத்தை மேம்படுத்துவதற்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது .வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் அருண் நேருவை நீங்கள் ஆதரித்து அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.
திமுக வேட்பாளர் அருண்நேரு பேசும் போது, விவசாயிகள் நிரம்பிய இப்பகுதி மக்களின் கோரிக்கைகளை நான் நன்கு அறிந்தவன்.அந்த வகையில் காவிரி ஆற்றில் நிரந்தர கொரம்பு அமைக்கவும், விவசாயிகளுக்கு இடுபொருள்கள், தளவாடப் பொருட்கள், மானிய விலையில் கிடைத்திடவும், விவசாயத்திற்காக மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி பெற்று விவசாயிகள் வாழ்வு மேம்படவும்,வாழை வெற்றிலை உள்ளிட்ட பணப்பயிர்கள் வாயிலாக விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
விவசாயத்திற்கான நீர் ஆதாரத்தை மேம்படுத்துவது, குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவது , ஏரி, குளங்கள், வரத்து வாய்க்கால் ஆகியவற்றை சீரமைத்து காவிரி ஆற்றின் உபரி நீரை கொண்டு நிரப்புவது உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த முனைப்புடன் பாடுபடுவேன். எனவே மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட திமுக வேட்பாளராகிய எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கூறினார்.
முன்னதாக அரங்கூர் ஊராட்சியில் காட்டு நாயக்கன் சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு சாதி சான்றிதழ் வேண்டும் என அமைச்சர் நேருவிடம் கோரிக்கை விடுத்தனர். தேர்தல் முடிந்தவுடன் அரங்கூர் காட்டு நாயக்கன் பொது மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படும் என்று கூறினார். திமுக வேட்பாளர் அருண் நேருக்கு அப்பகுதியினர் மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரச்சார பயணத்தில் திமுக தொட்டியம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பால.ந. திருஞானம், தொட்டியம் மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல், தொட்டியம் பேரூர் கழகச் செயலாளர் எம் ஏ ஆர் விஜய் ஆனந்த், காட்டுப்புத்தூர் பேரூர் கழகச் செயலாளர் சுப்பிரமணியன், தொட்டியம் பேரூராட்சி தலைவர் சரண்யா பிரபு, துணைத் தலைவர் எஸ்.ஏ.எஸ்.ராஜேஷ், காட்டுப்புத்தூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா சுரேஷ், காட்டுப்புத்தூர் பேரூராட்சி துணைத் தலைவர் சுதாசிவசெல்வராஜ் ஒன்றிய குழு தலைவர் கிருஷ்ணவேணி, ஆதிதிராவிட நல அணி திருச்சி வடக்கு மாவட்ட அமைப்பாளர் வரதராஜபுரம் மகாமுனி, சீமானூர் ஆறுமுகராஜா,
திருச்சி திமுக வர்த்தக அணி வடக்கு மாவட்ட துணை அமைப்பாளர் கே கே பூபதி,திருச்சி வடக்கு மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் காடுவெட்டி அகத்தீஸ்வரன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், மதிமுக மாவட்ட செயலாளர் டி.டி.சி.சேரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.