கடையநல்லூர், தென்காசி பகுதிகளில் பல்வேறு இடங்களில் பைக்குகள் திருடிய நபர் கைது பைக்குகள் பறிமுதல்.
கடையநல்லூர், தென்காசி பகுதிகளில் பல்வேறு இடங்களில் பைக்குகள் திருடிய நபர் கைது பைக்குகள் பறிமுதல்.
தென்காசி மாவட்டத்தில் அதிகரித்து வரும் பைக் திருட்டு சம்பவத்தை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின் பேரில் புளியங்குடி டி.எஸ்.பி., மீனாட்சி நாதன் மேற்பார்வையில், கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில் அடங்கிய குழுவினர் நேற்று மதுரை தென்காசி தேசிய சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, கடையநல்லூர் மங்களாபுரம் சோதனைச் சாவடி பகுதியில் பைக்கில் வந்த வாலிபரை
சந்தேகக்கின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்பொழுது அவரின் பைக்கில் ஒட்டப்பட்டு இருந்த பதிவு எண்ணை போலீசார் பரிசோதித்துப் பார்த்த பொழுது அது போலியான பதிவு எண் என தெரிய தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரைப் பிடித்து விசாரித்த பொழுது அவர் புளியங்குடி சிந்தாமணி சான்றோர் மடத்து தெருவை சேர்ந்த அட்சய லிங்கம் மகன் மனோகரன் வயது 45 என்பவர் என தெரியவந்தது இவர் கடையநல்லூர் தென்காசி பகுதிகளில் முகத்தை மூடியவாறு ஹெல்மெட் அணிந்து பைக்குகள் திருடியதும் தெரிந்தது. அந்த பைக்குகளை குறைந்த விலைக்கு பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட பைக்குகளை குறைந்த விலையில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் வழக்கு பதிந்து, பைக்குகளை திருடிய மனோகரனை கைது செய்தது மேலும், அவர் திருடி விற்பனை செய்த கடையநல்லூர் கடையநல்லூர் காவல் நிலையத்தில் 3 பைக்குகளும் தென்காசி காவல் சரக பகுதிகளில் 2 பைக்குகளும் மொத்தம் 5 ஸ்ப்ளெண்டர் பைக்குகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.