அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண் வழக்குரைஞர்கள் கோரிக்கைகளுக்கான மாநிலந் தழுவிய கையெழுத்து இயக்கம்.

அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண் வழக்குரைஞர்கள் கோரிக்கைகளுக்கான மாநிலந் தழுவிய கையெழுத்து இயக்கம்.

புதுக்கோட்டை மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதுமுள்ள நீதிமன்றங்களில் பெண் வழக்கறிஞர்களுக்கான கோரிக்கைகளை கொண்டு மாநிலந் தழுவிய கையெழுத்து இயக்கம் நடைபெற்றது,

பெண் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளில் இடர்பாடு இல்லாமல் ஈடுபட அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசிடமும், நீதித்துறையிடமும், பார் கவுன்சிலடமும் கேட்டுக் கொள்கிறது, அனைத்து நீதிமன்றங்களிலும் பெண் வழக்குரைஞர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய தனி ஓய்வறை அமைக்கப்பட வேண்டும், இளம் ஆண், பெண் வழக்குரைஞர்களுக்கு மாத உதவி தொகை வழங்குவதை அனைவருக்கும் உத்திரவாதபடுத்த வேண்டும், பெண் வழக்குரைஞர்கள் மற்றும் நீதிமன்ற பெண் ஊழியர்களின் குழந்தைகளை பராமரிக்கும் விதமாக குழந்தைகள் காப்பகம் அமைக்க வேண்டும், பாலியல் சீண்டல்களிலிருந்து பாதுகாக்க உச்ச நீதிமன்ற விசாகா தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் கமிட்டி அமைத்திட வேண்டும், இளம் பெண் வழக்குரைஞர்கள் அலுவலகம் அமைக்க சட்ட புத்தகங்கள் வாங்க வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் வழங்க ஆவன செய்ய வேண்டும், நீதிமன்றங்களில் போதிய கழிவறை வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்,வழக்கறிஞர்களின் ஜனநாயக அமைப்புக்கான பார்கவுன்சில் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கங்களில் பெண் வழக்கறிஞர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கபட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை கொண்டு மாநிலந் தழுவிய கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அலாவுதீன், மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சேக் ராவுத்தர் மாவட்ட குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஜெகன் மற்றும் பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்