கேரளா மாநிலம் மூணாறில் பிளாஸ்டிக் கழிவுகளை உணவாக எடுத்துக் கொள்ளும் படையப்பா யானையின் வீடியோ காட்சிகள் வெளியாகி வன ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
கேரளா மாநிலம் மூணாறில் பிளாஸ்டிக் கழிவுகளை உணவாக எடுத்துக் கொள்ளும் படையப்பா யானையின் வீடியோ காட்சிகள் வெளியாகி வன ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு அருகே படையப்பா காட்டு யானை குடியிருப்பு பகுதிகளில் உலா வந்து பொதுமக்களை அச்சுறுத்தியும் உணவுகளை தேடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தும் நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளை உடைத்து உணவுகளை தேடுவதற்காக அடிக்கடி உலா வரும் படையப்பா யானை மூணாறில் பிரபலமான ஒன்று
உணவுக்காக குடியிருப்பு பகுதிக்குள் அடிக்கடி வரும் படையப்பா யானை தற்போது மூணார் அருகே உள்ள கல்லார் என்ற இடத்தில் குப்பை கழிவுகளை தரம் பிரிக்கும் குப்பை கிடங்கில் காணப்பட்ட காய்கறி கழிவுகளை உண்பதற்காக வருகை தந்தது.
அப்பொழுது அதன் அருகே குவித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகளையும் சேர்த்து தின்று வருகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது
குப்பைகளை தரம் பிரிப்பதற்காக சேகரிக்கப்படும் கழிவுகளில் உள்ள காய்கறிகளோடு அங்கு வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளையும் சேர்த்து உணவாக எடுத்துக் கொண்டு வரும் வீடியோவை பார்த்து வன ஆர்வலர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதால் படையப்பா யானைக்கு பாதிப்புகள் ஏற்படக்கூட என்பதால் வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர.