தொகுப்பாளினியிடம் நடிகர் தனுஷ் ரசிகர் அத்து மீறல். காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ரசிகர்.
தொகுப்பாளினியிடம் நடிகர் தனுஷ் ரசிகர் அத்து மீறல். காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ரசிகர்.
தனுஷ் நடித்திருக்கும் புதிய படமான கேப்டன் மில்லர் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை நேரில் காண்பதற்கு நடிகர் தனுஷின் ரசிகர்கள் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் பிரபல தொகுபாளினி ஐஸ்வர்யா ரகுபதி கலந்து கொண்டார். அவர் அந்த படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கேப்டன் மில்லர் விழாவின் போது கட்டுக்கடங்காத கூட்டத்தில் செல்லும்போது, ரசிகர் ஒருவர் ஐஸ்வர்யாவிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அந்த நபரை பிடித்து பளார்…பளார் என்று தலையிலும் முதுகிலும் அடித்து, உன் மீது தப்பில்லன்னா எதுக்குடா ஓடுற என்று கேள்வி கேட்ட நடிகை ஐஸ்வர்யா. தொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அத்துடன் அத்தமீறலில் ஈடுபட்ட ரசிகரை பிடித்து தன் காலில் விழவைத்து மன்னிப்ப கேட்க வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகபதியிடம் ஏற்கனவே சரக்கு பட விழாவில் பிக் பாஸ் கூல் சுரேஷ் மாலை போட்டு தப்பாக நடந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது. அப்போதும் கூல் சுரேஷை கண்டித்தார். மன்னிப்பு கேட்க வைத்தார் என்பது குறிப்பிடதக்கது.