நடிகை எமி ஜாக்சனிடம் ப்ரொபோஸ் செய்த புதிய காதலன் –
நடிகை எமி ஜாக்சனிடம் ப்ரொபோஸ் செய்த புதிய காதலன் – இணையத்தை கலக்கும் சுவாரஸ்ய சம்பவம்.
நடிகை எமி ஜாக்சனிடம் ப்ரொபோஸ் செய்த புதிய காதலன் – இணையத்தை கலக்கும் சுவாரஸ்ய சம்பவம்.
மலை உச்சியில் இருக்கும் பாலம் ஒன்றில் நடிகை எமி ஜாக்சனிடம் ப்ரொபோஸ் செய்த புதிய காதலின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது .
தமிழ் சினிமாவில் கடந்த 2010ம் ஆண்டு ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படம் மதராசப்பட்டினம் . இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை எமி ஜாக்சன்.
முதல் படத்தில் கிடைத்த அட்டகாச அங்கீகாரத்தின் மூலம் ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என பன்மொழி படங்களில் நடித்து திரையுலகை கலக்கி வந்தார் .
பின்னர் சிறிது காலம் படம் நடிக்காமல் ஆன்ட்ரூஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்த எமி 2019ம் ஆண்டு அழகிய ஆண் குழந்தைக்கு தாயானார் ஆனால் துரதிஷ்டவசமாக ஆன்ட்ரூஸ் உடனான உறவை எமி முறித்து கொண்டார் .
இதையடுத்து தற்போது எட் வெஸ்ட்விக் எமி ஜாக்சனை செம க்யூட்டாக புரபோஸ் செய்துள்ளார், அதற்கு அவரும் புன்னகையுடன் ஓகே சொல்லியுள்ளார் . அழகிய மலை உச்சியில் இருக்கும் பாலத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.