பகலவாடி பகுதியில் அரசுகல்லூரி அமைக்க நடவடிக்கை எடுப்பேன் அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் வாக்குறுதி.

பகலவாடி பகுதியில் அரசுகல்லூரி அமைக்க நடவடிக்கை எடுப்பேன் அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் வாக்குறுதி.

பெரம்பலூர் நாடாளுமன்றத்துக்கு உட்பட்ட துறையூர் தெற்கு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் .அப்போது பகலவாடி பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

திருச்சிமாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகலவாடி, காளிபட்டி, கீரம்பூர் செங்காட்டு பட்டி, ஆதனூர். மருவத்தூர் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட கிராமங்களில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் தனது கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தலைமை தாங்கி பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது மு.பரஞ்ஜோதி பேசுகையில்,
இந்த மக்கள் எழுச்சியை பார்க்கும்போது நமது வேட்பாளர் சந்திரமோகனின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. இந்த தேர்தல் பாசத்துக்கும், பணத்துக்கும் நடக்கும் தேர்தல் . இதில் நமது வெற்றி வேட்பாளர் சந்திரமோகனின் பாசம் நிச்சயம் வெல்லும் .மக்கள் நமக்கு வெற்றியை தருவார்கள். நாங்கள் என்றென்றும் மக்களுடன் இருப்போம் என்றார்.

பிரச்சாரத்தின் போது வேட்பாளர் சந்திரமோகன் பொதுமக்கள் மத்தியில் பேசும்போது, இப்போது நீட் தேர்வை ரத்து செய்வோம். மாநிலங்களுக்கு விலக்கு அளிப்போம் என்றெல்லாம் கூறுவது வேடிக்கையாக உள்ளது. திமுகவினர் மக்கள் பிரச்சனைகளில் அக்கறை காட்டாமல் அரசியல் மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்கள். அதிமுகவினர் வாக்களிக்கும் மக்களுக்கு விசுவாசமாக இருப்பார்கள். எனக்கு ஒரு வாய்ப்பு தந்தால் இந்த தொகுதியை முன்மாதிரிமாற்றிக் காட்டுவேன். உங்களுக்கு என்றென்றும் விசுவாசமாக இருந்து மக்கள் பணியாற்றுவேன் என்றார்.பகலவாடி பகுதியில் வாக்கு சேகரிக்கும் போது பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய அரசு கலைக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி அளித்தார்.

பிரசாரத்தில் கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் இளவரசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இந்திரா காந்தி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் அறிவழகன் விஜய், மாவட்ட விவசாய அணி செயலாளர் பொன் காமராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் பூக்கடை குரு, பொதுக்குழு உறுப்பினர் சரோஜா, இளங்கோவன், முன்னாள் அரசு வழக்கறிஞர் செந்தில் குமார் ,தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், சொரத்தூர் சிவசாந்த், மனோகரன், மாவட்ட பிரதிநிதி ரமேஷ், ஒன்றிய குழு முன்னாள் தலைவர் மனோகரன், ஒன்றிய பாசறை செயலாளர் செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர் சசிகுமார், கூட்டணி கட்சியான தேமுதிக மாவட்ட செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் செல்லதுரை உட்பட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். பிரச்சாரம் செய்த அனைத்து பகுதிகளிலும் பெண்கள் வேட்பாளர் சந்திரமோகனை ஆர்வத்துடன் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்