இயற்கை வள பாதுகாப்பு சங்க கோரிக்கையை ஏற்று புளியரை சோதனை சாவடியில் தென்காசி நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் கிருஷ்ணசாமி ஆய்வு.
இயற்கை வள பாதுகாப்பு சங்க கோரிக்கையை ஏற்று புளியரை சோதனை சாவடியில் தென்காசி நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் கிருஷ்ணசாமி ஆய்வு.
தென்காசி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கனிம வள வாகனங்களால் தினம் தினம் மக்கள் படும் துன்பத்தை அறிந்து நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும். என்றும், இந்த கனிமவள வாகனங்களின் அணிவகுப்பை காண வேண்டுமென இயற்கை வள பாதுகாப்பு அமைப்பின் ஜமீன் கோரிக்கை வைத்திருந்தார்.
அதன் பெயரில் இன்று தென்காசி அஇஅதிமுக பாராளுமன்ற வேட்பாளர் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று புளியரை காவல் சோதனை சாவடி அருகில் நின்று கனிமவள வாகனங்களின் அணிவகுப்பையும் அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் அறிந்து கொண்டார். ஆவன செய்வதாக வாக்குறுதி அளித்துறுப்பதாக தகவல்.
உடன் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளருமான கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்..