திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கருப்பையா தீவிர வாக்கு சேகரிப்பு.
திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கருப்பையா தீவிர வாக்கு சேகரிப்பு.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்பி குமார் தலைமையில், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சங்கிலியாண்ட புரம், கொட்டப்பட்டு, சோழமாதேவி, எல்லக்குடி உள்ளிட்ட அறுபது இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
முன்னதாக சங்கிலியாண்ட புரம் பகுதியில் உள்ள ஸ்ரீ கஜசாந்த யோகீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தி பிரச்சாரத்தை துவக்கினார்.
அதிமுக வெற்றி வேட்பாளர் கருப்பையாவுக்கு பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர்.
அதனைத் தொடர்ந்து அதிமுகவினர் புடை சூழ வீதி, வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் குமார், கழக அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், வளர்மதி, மனோகரன், திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் சீனிவாசன், அணிச் செயலாளர்கள் சிந்தை முத்துக்குமார், ஆவின் கார்த்திக் தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.