திண்டுக்கல் அருகே அதிமுக பிரமுகர் பாண்டிச்சேரி போலீசாரால் கைது.
திண்டுக்கல் அருகே அதிமுக பிரமுகர் பாண்டிச்சேரி போலீசாரால் கைது.
திண்டுக்கல் கன்னிவாடி அருகே புதுப்பட்டி சேர்ந்தவர் நல்லமுத்து (எ) கண்ணன் இவர் அதிமுக பிரமுகர் ஆவார். இந்நிலையில் இன்று ரெட்டியார்சத்திரம் கோபிநாத சுவாமி கோவில் அடிவாரம் பகுதியில் தோட்டத்து வீட்டில் இருந்த நல்லமுத்து (எ) கண்ணனை பாண்டிச்சேரி சேர்ந்த காவல்துறையினர் கைது செய்து பாண்டிச்சேரி அழைத்துச் சென்றனர். இவர் இந்திய அரசால் மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் தொடர்பாக புரோக்கராக செயல்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இவர் அதிமுக சார்பில் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய தலைவருக்கு போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.