பாட்டாளி மக்கள் கட்சி திருச்சி மத்திய மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் உமாநாத் தலைமையில் நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம்.

பாட்டாளி மக்கள் கட்சி திருச்சி மத்திய மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் உமாநாத் தலைமையில் நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம்.

பாட்டாளி மக்கள் கட்சி திருச்சி மத்திய மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் உமாநாத் தலைமையில் நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது.

இக்கூட்டத்தில் வருகின்ற 21ந்தேதி திருவண்ணாமலையில் நடைபெறும் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநாட்டிற்கு பெருந்திரளாக கலந்துக் கொள்வது, ஒவ்வொரு பகுதியிலும் துண்டறிக்கையை விவசாய பெருமக்கள் மற்றும் பொதுமக்களிடம் கொடுப்பது, மாநகர் முழுவதும் சுவர் விளம்பரம் செய்வது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்திற்கு புத்தூர் பகுதி செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். இதில் வன்னியர் சங்க செயலாளர் கதிர்ராஜா, மாவட்ட அமைப்பு தலைவர் வினோத், மேற்கு தொகுதி தலைவர் சிவப்பிரகாசம், ஸ்ரீரங்க தொகுதி செயலாளர் கார்த்தி, தொகுதி தலைவர் ராஜு, ஜங்ஷன் பகுதி செயலாளர் பாஸ்கர், உறையூர் பகுதி செயலாளர் தினேஷ், வன்னியர் சங்க ஶ்ரீரங்க பகுதி செயலாளர் சந்தோஷ், மாவட்ட பசுமைதாயக செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட கொள்கை விளக்க அணி செயலாளர் ஶ்ரீகாந்த், புத்தூர் பகுதி தலைவர் சுரேஷ், இளைஞர் சங்க செயலாளர் முப்பீஸ் வட்ட செயலாளர் மாலிக் மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். இறுதியாக மாவட்ட பொருளாளர் சுதா நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்