பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில், அருண் நேரு எம்.பி சுற்றுப்பயணம்.பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில், அருண் நேரு எம்.பி சுற்றுப்பயணம்.பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.
திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ந.தியாகராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியின் தி.மு.கழக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்ற கே.என்.அருண் நேருவுக்கு வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கு நன்றியினை தெரிவிக்கும் வகையில் திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கு நேரில் வருகைதர உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் இந்தியா கூட்டணி மற்றும் தி.மு.கழகத்தை சார்ந்த திருச்சி மத்திய,வடக்கு மாவட்டத்தில் உள்ள, அனைத்து ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமைசெயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் பொறுப்பளர்கள் கழக முன்னோடிகள், செயல் வீரர்கள் அனைவரும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் தவறாது கலந்துகொள்ளுமாறுகேட்டுக்கொள்கிறோம்.
பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நிரல் விவரம் வருமாறு:
நாளை (11ந்தேதி)
வியாழக்கிழமை
துறையூர்
12-ந் தேதி
(வெள்ளிக்கிழமை)
உப்பிலியபுரம்
13-ந்தேதி
(சனிக்கிழமை)
மண்ணச்சநல்லூர்
14-ந்தேதி
(ஞாயிற்றுக்கிழமை)
மண்ணச்சநல்லூர் (முசிறி)
15-ந் தேதி
(திங்கட்கிழமை)
இலால்குடி
16-ந்தேதி
(செவ்வாய்கிழமை)
புள்ளம்பாடி
17-ந்தேதி
(புதன்கிழமை)
முசிறி
18-ந்தேதி
(வியாழக்கிழமை)
தா.பேட்டை
19-ந் தேதி
(வெள்ளிக்கிழமை)
மண்ணச்சநல்லூர்
20-ந்தேதி
(சனிக்கிழமை)
துறையூர் ஆகிய பகுதிகளுக்கு அருண்நேரு எம்.பி நேரில் சென்று மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கிறார் இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.