முதுமை சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.
முதுமை சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.
பாரதிதாசன் பல்கலைக்கழகம் சமூகப் பணித்துறை சார்பில் திருச்சி கே கே நகர் அருவி முதியோர் இல்லத்தில் முதுமை சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
பாரதிதாசன் பல்கலைக்கழக சமூக பணித்துறை தலைவர் பேராசிரியர் முனைவர் மங்களேஸ்வரன் வழிகாட்டுதலில் அருவி முதியோர் இல்லம் நிறுவனர் சையத் தாஹா வாழ்த்துக்களுடன் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பங்கேற்று முதுமை சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் குறித்து பேசுகையில்,
நாட்டிற்காகவும், குடும்பத்திற்காகவும் உழைத்து உடல் தளர்ந்து முதியோரானோர் தங்கள் வாழ்க்கையின் முதுமைப் பருவத்தில் உடல், உள, சமூக நலனுடன் தங்கள் வாழ்நாளின் இறுதிக்காலத்தைக் கழிக்கத்தக்கதான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள இன்றைய நாளில் தேவையாகும். நீண்ட ஆயுள் ஒரு வகையில் வரப்பிரசாதமாக அமைந்தாலும் அவ்வாழ்க்கையானது அநாவசிய மன அழுத்தங்கள் மற்றும் சமூக பொருளாதார தாக்கங்களுக்கு ஆளாகிறார்கள். முதியோர்கள் நாள் நோய்களான நீரிழிவு, தொய்வு போன்றவற்றாலும் தாக்கமுறுகின்றனர். அத்துடன் உடலின் மூளை நரம்புமண்டலத் தேய்மானங்களால் ஏற்படும் நோய் நிலைகள் மற்றும் எலும்பு, முட்டு, தேய்மானங்களால் உடல் இயக்கம் குறைவதனால் ஏற்படும் பாதிப்புகள் வயதானோரை தாக்குகின்றன. உடல் தொகுதிகளின் தேய்மானங்களினாலும் ஏற்படும் தாக்கங்களின் பாதிப்பு போன்றவற்றால் அவதியுறுகின்றனர். மேலும் மலம் மற்றும் சிறுநீர் தங்களை அறியாமலே கழிக்கும் நிலை, பெண்களில் கருப்பை கீழிறக்கம் போன்றன, உணவு உட்கொள்ளலில் மந்த நிலை ஆகியவற்றாலும் பாதிப்படைகின்றனர். எனவே முதியோர்கள் சமதள நிலப் பரப்பில் இயன்ற அளவு நடைபயிற்சியும் ஆரோக்கியமான வேக வைத்த அவித்த உணவுகளை உண்பதும் நலம் அளிக்கும் இரண்டு நேரம் பல் துலக்குதல் நலம் சேர்க்கும் உடலை தூய்மையாக பராமரித்து உறைவிடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
பாரதிதாசன் பல்கலைக்கழகம் சமூகப் பணித்துறை முதுநிலை முதலாமாண்டு மாணவர் ஷபான் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார்.