ஆகாயதாமரை படர்ந்துள்ள திருச்சி உய்யகொண்டான் ஆற்றை தூர் வார பாஜக கோரிக்கை.
ஆகாயதாமரை படர்ந்துள்ள திருச்சி உய்யகொண்டான் ஆற்றை தூர் வார பாஜக கோரிக்கை.
திருச்சி உய்ய கொண்டான் ஆற்றுப்பகுதி முழுவதுமாக ஆகாய தாமரை படர்ந்து உள்ளது. இதனால் தண்ணீர் சீராக போக முடியாத சூழ்நிலை உள்ளது , இனி வருகின்ற காலம் மழைக்காலம் என்பதால் மழை அதிகமாக பெய்யும் பொழுது, வாய்க்காலில் பெருக்கெடுத்து ஓடும் நீர் நிரம்பி அருகில் உள்ள வீடுகளுக்குள் செல்லும் ஆபத்து உள்ளது.
ஆகையால் பொதுப்பணி நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் உடனடியாக படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்றி ,தூர் வாரியும் விட்டால் கரை ஓர மக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இருக்காது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணும் படி அந்த பகுதி பா.ஜ.க வினர் கோரிக்கை வைத்துள்ளனர்.