திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே. பி.நட்டா ரோடு ஷோவுக்கு அனுமதி .
திருச்சியில் ஜே. பி.நட்டா ரோடு ஷோவுக்கு கண்ணப்ப்அனுமதி .
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நாளை திருச்சியில் ரோடு ஷோ நடத்த பாஜக சார்பில் அனுமதி கோரி இருந்தனர். இந்த நிலையில், சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை காரணம் காட்டி, திருச்சி மாநகர காவல்துறை அனுமதி மறுத்தது. மேலும் மாற்றுப் பாதையை தேர்ந்தெடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பாஜகவினர் மதுரை உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில் கண்ணப்பா ஹோட்டலில் இருந்து இ.எஸ்.ஐ மருத்துவமனை வழியாக ரோடு ஷோ நடத்திகொள்ள மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.