புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தவர்: திருச்சி மருத்துவமனையில், இருந்து நோயாளி திடீர் மாயம். மூக்கில் பொருத்தப்பட்டிருந்த டியூப்புடன் சென்றதால் பரபரப்பு.

புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தவர்: திருச்சி மருத்துவமனையில், இருந்து நோயாளி திடீர் மாயம். மூக்கில் பொருத்தப்பட்டிருந்த டியூப்புடன் சென்றதால் பரபரப்பு.

அரியலூர் மாவட்டம் அயன்ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி (வயது 65)விவசாயி .இவர் புற்றுநோய்க்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். மனைவியும் உடன் இருந்து கவனித்து வருகிறார். இந்த நிலையில் மனைவி மருந்து வாங்க சென்றார் .

அப்போது மருத்துவமனையில் இருந்து கையில் ஒரு குச்சிப்பை எடுத்துக்கொண்டு மருத்துவமனையை விட்டு, தனியாக வெளியே வந்த வீரமணி பின்னர் காணாமல் போய்விட்டார். அவர் வெள்ளை வேஷ்டி, சட்டை அணிந்து இருந்தார். புற்றுநோய்க்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு மூக்கில் டியூப் போடப்பட்டிருந்தது. அந்த டியூப்புடன் அவர் மாயமாகிவிட்டார்.

இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்