சிதம்பரம் லோக்சபா தொகுதி: திருமாவளவனுக்கு பின்னடைவு. மிரட்டும் அதிமுக வாக்கு வங்கி!
சிதம்பரம் லோக்சபா தொகுதி: திருமாவளவனுக்கு பின்னடைவு. மிரட்டும் அதிமுக வாக்கு வங்கி!
சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் 6-வது முறையாக களம் காண்கிறார். ஏற்கனவே 2 முறை வென்ற திருமாவளவன், 3-வது முறை வெற்றிக்காக போராடுகிறார்.
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவனும், அதிமுகவில் சந்திரகாசனும், பாஜகவில் கார்த்தியாயினியும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜான்சி ராணியும் களத்தில் உள்ளனர்.
கடலூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 3 மாவட்டங்களின் தொகுதிகளை உள்ளடக்கியது தான் சிதம்பரம் மக்களவை தொகுதி. இத்தொகுதியில் வன்னியர்கள்; தலித்துகள், தேவேந்திர குல மக்கள், மூப்பனார், உடையார், முதலியார், ரெட்டியார், பிள்ளைமார், யாதவர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் நிரம்பிய தொகுதி.
சிதம்பரம் லோக்சபா தொகுதியில் 6-வது முறையாக களம் காண்கிறார் திருமாவளவன். ஏற்கனவே 2 முறை வென்ற தொல். திருமாவளவன். திமுகவின் வாக்கு பலத்தை இந்த முறை முழுமையாக நம்புகிறார். ஆனால், ஆதவ் அர்ஜினனுக்காக, பொது தொகுதி ஒன்றை கேட்டு கடைசி வரை திமுக தலைமையிடம் திருமா மல்லுக்கு நின்றதை திமுகவினர் ரசிக்கவில்லை. ஆகையால் ஒரு பிரிவு திமுகவினர் உள்ளடி வேலை செய்து திருமாவை தோற்கடிக்க முயற்சிப்பதாகவும் தகவல்.
அதிமுக வலிமையான வாக்கு வங்கியை வைத்திருக்கிறது. அதிமுக வேட்பாளர் சந்திரகாசனும் பம்பரமாக தொகுதியை சுற்றி வாக்கு கேட்டு வருகிறார். சென்ற முறை காட்டுமன்னார்குடி தொகுதி தான் திருமாவின் வெற்றிக்கு கை கொடுத்து. இந்த முறை காட்டுமன்னார்குடியும் கை கொடுக்க கூடாது என்று அதிமுகவினர் அந்த தொகுதியை தனி கவனம் செலுத்தி திருமாவை மிரட்டி வருகிறார்கள்.
பாமகவை நம்புகிறது பாஜக. பாஜக வேட்பாளர் கார்த்தியாயிணியும் பாமக, பாஜகவினரோடு தீவிர வாக்கு வேட்டையாடி வருகிறார். இவருக்கு பெரம்பலூர் தொகுதியை சார்ந்த பாஜகவினரும் வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
இறுதி கட்ட நிலவரப்படி சென்றமுறை போல் இந்த முறை திருமாவை வெற்றி பெறுவது என்பது அவ்வளவு சுலபமல்ல.