இரண்டு பேரை கல்யாணம் செய்து 3வதாக கரூர் வாலிபரை மணந்த கோவை சீட்டிங் ‘கல்யாண ராணி’ கைது.
இரண்டு பேரை கல்யாணம் செய்து 3வதாக கரூர் வாலிபரை மணந்த கோவை சீட்டிங் ‘கல்யாண ராணி’ கைது.
கரூர் மாவட்டம் புஞ்சைக்காளக்குறிச்சியை சேர்ந்தவர் ரமேஷ்(30). கொசுவலை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த ரேணுகா(36) என்பவருக்கும் கடந்த 12ம் தேதி கரூர் மண்மங்கலத்தில் உள்ள கோயிலில் திருமணம் நடந்தது.
இந்நிலையில் ரேணுகாவுக்கு, ஏற்கனவே புதுக்கோட்டையை சேர்ந்த மெய்யர் மற்றும் கோவையை சேர்ந்த லோகநாதன் ஆகியோருடன் திருமணம் நடந்திருப்பது ரமேசுக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக ரேணுகாவிடம் ரமேஷ் கேட்டுள்ளார். அதற்கு ரேணுகா, நான் உன்னை விட்டு செல்ல வேண்டுமானால் ரூ.20 லட்சம் ரொக்கம், 20 பவுன் நகை கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரமேஷ் புகார் செய்தார்.