புதுகை காந்தி நகர் சுடுகாட்டிலுள்ள கை அடிபம்பை சரிசெய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை.
புதுகை காந்தி நகர் சுடுகாட்டிலுள்ள கை அடிபம்பை சரிசெய்ய
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை.
புதுக்கோட்டை மாவட்டம் காந்தி நகர் பகுதியிலுள்ள சுடுகாட்டில் கடந்த நான்கு மாதங்களாக அடி பம்பு பழுதடைந்து கிடக்கிறது, இதனால் இறந்தவர்களை அடக்கம் செய்ய வருபவர்கள் பெறும் பாதிப்பு அடைகின்றனர்,
காந்தி நகரிலுள்ள கை அடி பம்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் காந்தி நகர் கிளை செயலாளர் வழக்குரைஞர் ஜெகன்,மற்றும் கனேசன், தீக்கதிர் செல்வம்,
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சலோமி, மருந்தாளுநர் சங்க மாநில தலைவர் கார்த்திக் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு புதுக்கோட்டை மாநகராட்சி நிர்வாகம் சரி செய்து தர கோரிக்கை வைத்துள்ளனர்.