வடமாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியதை கண்டித்து சுமைப்பணி தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஒத்துகைப் போராட்டம். திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் பரபரப்பு.
வடமாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியதை கண்டித்து சுமைப்பணி தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஒத்துகைப் போராட்டம். திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் பரபரப்பு.
திருச்சி ஈ.பி ரோடு பகுதியில் உள்ள வேஸ்ட் பேப்பர் கடையில்
கடந்த 20 வருடமாக 45 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள்
சங்கம் அமைத்து கூலி உயர்வு, போனஸ், பணி பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகளை போராடியும், தொழிலாளர் துறைமூலமாகவும் பெற்று வந்தனர். தீபாவளி போனஸ் வழங்குவதில் முதலாளிக்கும்
தொழிலாளர்களுக்கும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தனர். இப்பிரச்சினை தொழிலாளர் துறை ஆணையர் முன் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் வேஸ்ட் பேப்பர் கடை சார்பில் மதுரை உயர் நீதிமன்றம் சென்று, யாரை வேண்டுமானாலும் வேலைக்கு வைத்து கொள்ளலாம் என உத்தரவு பெற்றுள்ளனர். அந்த உத்தரவில் 20 ஆண்டு காலம் அங்கு வேலை செய்யும் 42 தொழிலாளர்களை வெளியேற்றவோ, வேலை நீக்கம் செய்யவோ எந்த உத்தரவும் இல்லை.
இந்நிலையில் போலீசார் பாதுகாப்புடன் வெளி மாநில தொழிலாளர்களை வைத்து வேஸ்ட் பேப்பர் கடையினர் லோடு ஏற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்த தகவலறிந்த சுமைப்பணி தொழிலாளர்கள் குடும்பத்துடன் சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையில் கோட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு
தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் கோட்டை காவல் உதவி ஆணையர் ஜெயசீலன், கோட்டை காவல் ஆய்வாளர் பெரியசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் சிஐடியு மாவட்ட தலைவர் சீனிவாசன், லாரி ஷெட் சமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் ராமர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் இப்பிரச்சனைக்கு உரிய தீர்வு காணும் வரை போலீசார் அங்கு வேலை செய்யும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கவோ, வேலை செய்யவோ அனுமதிக்க கூடாது என தொழிலாளர்கள் வலியுறுத்தினர். அதற்கு போலீசார் அங்கு பணி செய்யும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது, பணி செய்ய அனுமதிப்பது குறித்து திங்களன்று உயர்நீதிமன்றத்தை அணுகி உரிய வழிகாட்டுதல் பெற்று அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.