ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி, காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில்அன்னதானம் -நலத்திட்ட உதவிகள்
ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி, காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில்அன்னதானம் -நலத்திட்ட உதவிகள்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வழங்கினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் ராகுல் காந்தியின் 54-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பாக மாநில துணைத்தலைவர்
பொறியாளர் அ.பேட்ரிக் ராஜ்குமார்
ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன .
நலிந்த காங்கிரஸ் பேரியக்க பேச்சாளர்கள் , தியாகிகள் , பேரியக்கப்பணிகளிலே தன்னலமின்றி பணியாற்றும தோழர்கள் 10 பேருக்கு ருபாய் 10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது . காங்கிரஸ் தொண்டர்களின் ஏழை குடும்ப பெண்களுக்கு ரூபாய் 10000 பத்தாயிரம் மதிப்புள்ள தையல் இயந்திரம் 5 நபர்களுக்கும், மொத்தம் 50 ஆயிரம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது. தொடர்ந்து சத்தியமூர்த்தி பவனில் 3 வகையான உணவு தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது .
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை.எம்.எல்.ஏ, கலந்து கொண்டு அன்னதானம், நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்நிகழ்வில்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர் இளங்கோவன் எம்.எல்.ஏ.,தங்கபாலு
அசன் மவுலானா எம்.எல்.ஏ.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவு தலைவர்
முகமது ஆரிப் மற்றும் நிர்வாகிகள்
கலந்துகொண்டனர்.