‘மிக்ஜம்’ புயல் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

மிக்ஜம்‘ புயல் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கிமீ வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து, ‘மிக்ஜம்’ புயலாக வலுவடைந்துள்ளது.

இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுப்பெற்று, வரும் 4ஆம் தேதி காலைக்குள் தெற்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் மேற்கு மத்திய வங்கக்கடலை அடையும்.

பின்னர் இது, நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை வரும் 5 ஆம் தேதி கடக்கும். அப்போது, அதிகபட்சமாக மணிக்கு 80-90 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மீனவர்களுக்கும், கப்பல்களுக்கம் தெரியப்படுத்தும் வகையில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 2 ஆண் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு இன்று காலையில் ஏற்றப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்