அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப்பள்ளியில் நினைவு  தின.கொண்டாட்டங்கள். ஆசிரியை வசந்தா சிறப்பு ஏற்பாடு.

அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப்பள்ளியில் நினைவு  தின.கொண்டாட்டங்கள். ஆசிரியை வசந்தா சிறப்பு ஏற்பாடு.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள, அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப்பள்ளியில் உலக பறவைகள் தினம்,  ஷாஜகான் பிறந்தநாள்,  உலகின் முதல் ஒரு நாள் கிரிக்கெட் தினம்,  பண்பலை வானொலி  காட்சி படுத்தப்பட்ட தினம் -1940,  டெய்லி மெயில் தாள் கடல் தாண்டி சென்றநாள் -1914  ஆகிய 5 தினங்கள் நினைவு கூர்ந்து கொண்டாடப்பட்டன.

ஏன் மற்றும், எதற்கு இத்தினங்கள் கொண்டாடப்படுகின்றது என்பது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது. இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வண்ணம் மாணவர்கள் அனைவரும் சிறப்பு ஓவியத்திற்கு வண்ணம் தீட்டினார்கள். மாணவர்களின் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. பள்ளியில் நடத்தப்பட்ட போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில்  செயலாளர் ஆறுமுகம், பொறுப்பு தலைமையாசிரியர் இரவீந்திரன், ஆசிரியர்கள் ச.சந்திரசேகரன், சரண்யா, இலக்கியா, ப.விஜயலக்ஷ்மி,ஆனந்தன், மு.வீராசாமி ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் பெற்றோர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்த சிறப்பான நிகழ்ச்சியை பள்ளி ஆசிரியையான வசந்தா அவர்கள் செய்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்