விவசாய நிலத்தில் கவிழ்ந்த லாரியை மீட்க கோரிக்கை.
விவசாய நிலத்தில் கவிழ்ந்த லாரியை மீட்க கோரிக்கை.
தென்காசி மாவட்டம் புளியறையில் வயலில் கவிழ்ந்து கிடக்கும் அமில லாரியை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
தமிழகத்திலிருந்து சிமென்ட் தயாரிக்க பயன்படுத்தப்படும் அமிலத்தை ஏற்றிக் கொண்டு கேரளம் நோக்கிச் சென்ற டேங்கர் லாரியானது, புளியறை பகுதியில் விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்து நிகழ்ந்த ஒருவாரம் ஆகியும் லாரியை மீட்க போலீஸாரும், லாரியின் உரிமையாளரும் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. டேங்கர் லாரியில் உள்ள அமில கலவையானது விவசாய நிலத்தில் கொட்டினால், அசாதாரண சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே, டேங்கர் லாரியை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.