பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. பாண்டியாபுரம் மக்கள் வேதனை.
பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. பாண்டியாபுரம் மக்கள் வேதனை.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியம் பாண்டியாபுரம் கிராமத்தில் மழை அதிகமாக பெய்ததால் அங்குள்ள குளம் நிரம்பி, இருபுறமும் உள்ள ஓடைகளிலும் தண்ணீர் நிரம்பி உள்ளதால், அந்த பகுதியில் உள்ள மக்கள் வெளியில் வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வாருகாலிலும், குளத்திலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் எந்தவித அத்தியாவசிய பொருட்களும் வாங்க வெளியில் செல்ல மிகவும் கஷ்ட்பட்டு வருகின்றனர்.
அதேபோல் விவசாய நிலங்களுக்கு செல்பவர்களும், சேர்வராயன் கோவிலுக்கும், பொய்கை உடையார் கோவிலுக்கு செல்பவர்களும் சொல்லனா துயர நிலையை அனுபவித்து வருகிறார்கள். இது சம்பந்தமாக வெள்ளாளன்குளம் ஊராட்சிமன்ற தலைவரிடம் அந்த பகுதி மக்கள் பலமுறை வசதி தர சொல்லி மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார்கள். ஆகையால் மாவட்ட கலெக்டரோ, மேலநீலிதநல்லூர் வட்டாரவளர்ச்சி அலுவலரோ, பாதிப்புக்குள்ளாகி இருக்கும் பாண்டியாபுரம் கிராம மக்கள் விசயத்தில் அக்கறை செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கை ஆகும்.