ஆயுள் கைதியை சித்ரவதை செய்த விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட பெண் டி.ஐ.ஜி., ராஜலட்சுமி சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
ஆயுள் கைதியை சித்ரவதை செய்த விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட பெண் டி.ஐ.ஜி., ராஜலட்சுமி சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவரை சிறைத்துறை டி.ஐ.ஜி., ராஜலட்சுமி தமது வீட்டு வேலைக்கு பயன்படுத்தியாக தொடர்ச்சியான புகார்கள் எழுந்தன. இது குறித்து கைதியின் தாயார் புகார் அளித்திருந்தார். அதில் தமது மகனை போலீசார் கொடுமைப்படுத்தியதாகவும், வீட்டு வேலையின் போது பணம், பொருட்களை திருடியதாக குற்றம் சாட்டியதாகவும் கூறி இருந்தார்.
இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,யிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. டி.ஐ.ஜி., ராஜலட்சுமி, கூடுதல் எஸ்.பி., அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட 14 பேர் மீது சி.பி.சி.ஐ.டி., 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.
இந்நிலையில், கைதி சித்ரவதை வழக்கில் நேற்று வரை காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு இருந்த டி.ஐ.ஜி., ராஜலட்சமி அதிரடியாக இன்று சஸ்பென்ட் செய்யப்பட்டு உள்ளார். அவருடன் சேர்த்து, கூடுதல் எஸ்.பி., அப்துல் ரஹ்மான், ஜெயிலர் அருள்குமரன் ஆகியோரும் சஸ்பென்ட் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை சிறைத்துறை டி.ஜி.பி., மகேஸ்வர தயாள் வெளியிட்டு உள்ளார்.